கையடக்க தொலைபேசிகளை online இல் விற்பது எப்படி?

கையடக்க தொலைபேசிகளை online இல் விற்பது எப்படி?

கையடக்கத் தொலைபேசிகள் எப்போதும் ஒரு பெரிய சந்தையாக திகழ்கின்றன. கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் எப்பொழுதுமே சிறந்த சிறப்பம்சங்களைக் கொண்ட புதிய கையடக்கத் தொலைபேசிகளை மேலும் கட்டுப்படியான விலையில் தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும், கையடக்கத் தொலைபேசிகளை இணையவழி (ஒன்லைன்) மூலமாக விற்பனை செய்வது இலாபகரமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நீங்கள் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்கின்றீர்கள் என்பது மாத்திரம் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை பெற போதுமானதாக இருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக, விற்பனைக்காக கையடக்கத் தொலைபேசிகளை பெற்றுக் கொள்வது விலை அதிகமானதாக காணப்படுகின்றமையால், ஏற்கனவே உங்களது செலவுகள் அதிகமாகக் காணப்படும். அத்துடன், ஒவ்வொரு வணிகமும் ஆகக் குறைந்தபட்சம் சமநிலைப் புள்ளியையாவது அடைந்து கொள்ள வேண்டியுள்ளது. நிச்சயமாக, வெற்றிகரமான வியாபாரத்தை மேற்கொள்வதற்கு நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வெண்டும் என்பதுடன் ஒரு மூலோபாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதோ, இலங்கையில் நீங்கள் ஒரு விற்பனையாளராவதற்கு எங்கிருந்து ஆரம்பிக்க – இன்றே Daraz இல் விற்பனை செய்யுங்கள்:

விபரநிரல் ஒன்றை உருவாக்கவும்

 1. வகையை தீர்மானிக்கவும்
  • நீங்கள் பாரிய அளவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் துணையுற்பத்திகளை விற்பனை செய்வதற்கு திட்டமிடுகின்றீர்கள் என்றால், நீங்கள் அவற்றை வகைப்படுத்திக் கொள்வது உங்களது வியாபாரத்திற்கு உதவியாக அமையும். கையடக்கத் தொலைபேசிகளை அதனை உற்பத்தி செய்த நிறுவனங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக் கொள்ளலாம். துணையுற்பத்திகளைப் பொறுத்தவரையில், அவற்றினது தன்மைக்கு ஏற்ப பிரித்துக் கொள்ளலாம். உதாரணமாக – கைத் தொலைபேசி மேலுறைகள் (Mobile cases), செவிபன்னிகள் (Earphones), மின் சேமிப்பகங்கள் (Power banks), நினைவக அட்டைகள் (Memory cards) என வகைப்படுத்திக் கொள்ள முடியும்.
 2. விலைகளை தீர்மானிக்கவும்
  • வாடிக்கையாளர் தனது கொள்வனவு பற்றிய முடிவை எடுப்பதற்கு இதுவொரு முக்கிய காரணியாக காணப்படுகின்றமையால், விலையைத் தீர்மானித்தல் மிக முக்கியமானதாகும். இது விடயத்தில், உங்களுக்கு விற்பனை செய்தவரிடம் இருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட விலை மற்றும் உங்களது போட்டி விற்பனையாளர்கள் வழங்கும் விலை போன்றவற்றை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆகவே, நீங்கள் மேலதிக தொகை ஒன்றைச் சேர்க்க வேண்டும். ஆயினும், இலாப எல்லையை குறைவான மட்டத்தில் வைத்துக் கொள்வது சிறந்ததாகும். ஒரு புதிய வியாபாரம் என்ற அடிப்படையில், எல்லோருக்கும் புலப்படக் கூடிய விதத்தில் இருப்பதும், அதிகமான வாடிக்கையாளர்களை உங்களிடமிருந்து கொள்வனவு செய்யத் தூண்டுவதுமே உங்களுக்கு முன்னுரிமையான விடயமாகும். இதனை அடைந்து கொள்வதில் குறைந்த விலைகள் சிறந்ததொரு வகிபாகத்தை கொண்டிருப்பது வழக்கமாகும்.
 3. உற்பத்தியின் புகைப்படங்களை தயாராக வைத்திருக்கவும்
  • வாடிக்கையாளர்களைக் கவர்;ந்திழுப்பதில் குறிப்பிட்ட உற்பத்தியின் புகைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவுக்கதிகமான புகைப்படங்களை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. ஆனால், அது எவ்வறு காட்சியளிக்கின்றது என்பதை காண்பிக்கும் தரமான சில புகைப்படங்களே அதனைச் செய்வதற்கு போதுமானவை.
 4. பொருள் பற்றிய விபரத்தை எழுதவும்
  • Daraz இல் நீங்கள் விற்பனை செய்யும் போது, உற்பத்திப் பொருள் பற்றிய விபரமானது ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. அந்த உற்பத்திகள் கையடக்கத் தொலைபேசிகள்  என்றால், உற்பத்திப் பொருள் பற்றிய விபரம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகின்றது. அந்த வகையில், விபர உள்ளடக்கமானது, கையடக்கத் தொலைபேசியில் உள்ள சிறப்பம்ச வசதிகள் மற்றும் அனுகூலங்கள் பற்றி பேசுவதாக அமைய வேண்டும். அத்துடன், உற்பத்திப் பொருளின் விபரத்தை மேம்படுத்தும் பொருட்டு நீங்கள் SEO Keywords இனை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கொடுப்பனவு முறை ஒன்றை தெரிவு செய்க

ஒன்லைன் ஊடாக நீங்கள் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும்போது, நீங்கள் இரண்டு கொடுப்பனவு முறைமைகளை தேர்ந்தெடுக்க முடியும். அவையாவன, பொருள் விநியோகத்தின் போது பணம் வழங்குதல் (COD) மற்றும் ஒன்லைன்  கொடுப்பனவு முறை என்பனவாகும். உங்களது ஒன்லைன் பொருட் தளத்துடன் பாதுகாப்பான கொடுப்பனவு முறைமைத் தெரிவுகளை ஒருங்கிணைத்துக் கொள்வது சிறந்ததொரு யோசனையாகும்.

Delivery அனுப்புவதற்கான உதவிக் குறிப்புகள்

இலத்திரனியல் வணிகத்தில் பொருட்களை; அனுப்புவதற்கான தெரிவுகள் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்தமையாக இருக்க வேண்டும். சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அவையாவன – ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு நீங்கள் பொருள் விநியோகம் செய்வதில்லை என்றால், அதனை முன்கூட்டியே கொள்வனவாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதேபோல பொருள் அனுப்பும் செயன்முறைகள் தொடர்பில் அவர்களுக்கு தொடர்ச்சியாக தகவல் வழங்குவதுடன், அண்;ணளவான விநியோக காலத்தையும் தெரியப்படுத்த வேண்டும். அதேவேளை, குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட கொள்வனவுக்கு நீங்கள் இலவச Delivery சேவையையும் அறிமுகப்படுத்த முடியும் – இது நிச்சயமாக அதிகளவான கொள்வனவாளர்களை கவர்வதற்கு வழிவகுக்கும்.

உங்களது தளத்துக்கான வரவை அதிகரித்தல்

நீங்கள் இப்போது முதலாம் கட்ட நடவடிக்கையை செய்து விட்டீர்கள். இப்போது, கொஞ்சம் தந்திரோபாயமான விடயத்திற்கு வாருங்கள் – அது உங்களது ஒன்லைன் பொருட் தளத்திற்கான இணையப் பாவனையாளர் போக்குவரத்து தொடர்புகளை வழிப்படுத்தலாகும். உங்களால் இணைய தளத்துக்கான வரவை (Traffic) கவர முடியாமல் போகுமென்றால், உங்களிடத்தில் மிகச் சிறந்த உற்பத்திகள் இருந்தால் மட்டும் போதாது.

 1. தேடல்பொறி உகப்பாக்கம் (SEO)
  • உங்களது டொமைன் இனை மேம்படுத்துவதற்கும் இணையப் பாவனையாளர்களின் போக்குவரத்தை இயல்பாகவே திசைமுகப்படுத்துவதற்கும் (SEO) ஒரு வழிமுறையாகும். இது அதிக நேரத்தை எடுக்கும் செயன்முறையாகும். அதன்படி, தேடல் பொறிகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை தேடும் கோரிக்கைகளை முன்வைக்கும் வேளையில், வெளிப்படும் விபரங்களில் முன்னிலைப் பட்டியயில் உங்களது பொருட் தளத்தையும் காட்சிப்படுத்துவதற்கு ஏற்றாற்போல், மூலோபாய அடிப்படையில் நீங்கள் கலைச்சொற்களை உங்களது உள்ளடக்கத்தில் பயன்படுத்த வேண்டும்.
 2. உள்ளடக்கத்தை சந்தைப்படுத்தல்
  • எதிர்காலத்தில் சாத்தியமுள்ள பொருட் கொள்வனவாளர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் வலியுறுத்தும் மற்றும் தகவலளிக்கும் வலைப்பதிவுகளை எழுதுங்கள். அந்த கட்டுரையில் உங்களது பொருட் தளத்தின் இணைய தொடுப்பை (link) உட்சேர்ப்பதன் மூலம் இணையப் பாவனையாளர்களின் போக்குவரத்தை உங்களது பொருட் தளத்தை நோக்கி முன்னகர்த்துங்கள். உங்களது வர்த்தகக் குறியீடு எல்லோருக்கும் புலனாகும் தன்மையை அதிகரிப்பதற்கும் நீங்கள் விரும்பிய டொமைனை நோக்கி இணையப் பாவனையாளர்களின் போக்குவரத்தை நகர்த்துவதற்கும், உள்ளடக்கத்தை சந்தைப்படுத்தலானது ஒரு தகவலளிக்கின்ற மற்றும் நுட்பமான வழிமுறையாகும்.

இந்த முறைமைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களது இணைய கையடக்கத் தொலைபேசி விற்பனைத் தளங்கள் மேலும் அதிகமான விற்பனையை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை நிச்சயமாக மேம்படுத்திக் கொள்ளலாம்.

னுயசயண விற்பனையாளர் நிகழ்ச்சித் திட்டம் (The Daraz Seller Program) ஆனது, மிகப் பெரிய இலத்திரனியல் வர்த்தக நாமத்தைக் கொண்ட ஒரு விற்பனையாளராக முன்னேறுவதற்கான அற்புதமான வாய்ப்புக்களை உங்களுக்கு வழங்குகின்றது.

Daraz விற்பனையாளர் நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் அனுகூலங்கள்

 • நீங்கள் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை அணுகும் வசதியைப் பெறுவீர்கள்
 • பட்டியலிடும் கட்டணம் இல்லை. நீங்கள் விற்பனை செய்யும் போது மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
 • கொள்வனவுக் கட்டளைகள் (ஓடர்கள்) விடயத்தில் நீங்கள் மிக விரைவான மற்றும் நம்பகமான கப்பலில் பொருளனுப்பும் சேவையை பெறலாம்
 • பாதுகாப்பான மற்றும் உரிய நேரத்திலான கொடுப்பனவுகள் மூலம் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்
 • பொருளகற்றல் விடயத்தில் உதவுவதற்காக தொழில்வாண்மைத்துவ சேவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அனுபவிப்பதற்கு பலதரப்பட்ட அனுகூலங்கள் காத்திருக்கின்றன – எதற்காக நீங்கள் தாமதிக்கின்றீர்கள்?

இன்றே Daraz விற்பனையாளராவதற்கு ‘கிளிக்’ செய்யுங்கள். Daraz உடன் இணைந்து விற்பனை செய்யுங்கள்

daraz seller center
Click on the image to download!

Amaani Inthikab

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php