இணையவழியில் உங்களின் இலத்திரனியல் வர்த்தகத்தின் விற்பனையை பன்மடங்காக்க 8 ஆலோசனைகள்!

இணையவழியில் உங்களின் இலத்திரனியல் வர்த்தகத்தின் விற்பனையை பன்மடங்காக்க 8 ஆலோசனைகள்!

இணையவழியில்  இலத்திரனியல் வர்த்தகத்தின் அதிகரிப்பும் இலத்திரனியல் கருவிகள் மற்றும் சாதனங்களுக்கான  தேவையும் ஆண்டுமுழுவதும் இலங்கையில் அதிகமாய் இருப்பதில் ஆச்சரியமில்லை.

குறிப்பாக கோடை விடுமுறை காலங்களில் விற்பனை மேலும் அதிகரிக்கிறது!

மின்னணு வர்த்தகத்தின் விரிவாக்கமும் நிகழ்நிலையில் நுகர்வுகளின் அதிகரிப்பும் நடந்துகொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் விற்பனைக்கும் கொள்வனவுக்கும் சிறந்த மாற்றீடாக இணையவழி வர்த்தகங்கள் பெருகுகின்றன.

நீங்கள் இணையவழி இலத்திரனியல் வர்த்தகத்தில் கவனத்தை குவித்துள்ள, ஒரு சிறிய அல்லது நடுத்தர வர்த்தக நிறுவனத்தை வைத்திருந்து, உங்களது வியாபாரத்தை கூட்டி அதிக லாபம் பெற எண்ணினால் உங்களது இணைய வர்த்தக நிலையத்தை இலகுவாக அணுகக்கூடிய வகையிலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும் கட்டமைக்கவேண்டியது அவசியமாகும்.

உங்கள் நிகழ்நிலை இலத்திரனியல் வணிகத்தை மேம்படுத்த தொழில்முறை வல்லுனர்களிடமிருந்து சிறந்த ஆலோசனைகள்  இதோ.

உங்களிடம்நிகழ்நிலைஇலத்திரனியல்வணிகம்ஒன்றுஇருந்துஅதன்மூலம்நல்லலாபத்தைபெறவிரும்பின்உங்களின்வணிகத்தைமேம்படுத்தநீங்கள்பின்பற்றக்கூடியசிறந்தஆலோசனைகளும்குறிப்புக்களும்இதோ!

 • உங்கள் இணையவழி வர்த்தக நிலையத்துக்கான ஒழுங்கானதும் விளக்கமானதுமான அறிமுகத்தை தாருங்கள்.

உங்கள் இணையவழி விற்பனைக்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதில் இலத்திரனியல் வர்த்தக நிலையத்துக்கான ஒழுங்கானதும் விளக்கமானதுமான தொழில்முறையிலான  அறிமுகம் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் வர்த்தக நிலையம் பற்றிய சிறு அறிமுகம், மின்னஞ்சல், தொடர்பு முறைகள், தனித்துவம், சமூக வலைத்தளம் பற்றிய விடயங்களை சேர்த்தல் இன்றியமையாதது. இது உங்கள் வணிகத்தை மக்களிடையே பரவலாக சென்றடையவைக்கும்.

 • உங்களின் பொருட்களை துல்லியமாக பட்டியலிடுங்கள்.

இணையவழியில் விற்பனை என்று வரும்போது பொருட்கள் எப்படி பட்டியலிடப்பட்டு இருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இறுதியில் உங்களிடம் ஒரு இணையவழி வர்த்தக நிலையம் இருந்தால் வாடிக்கையாளர்கள் பொருட்களை அவர்களாக பார்க்க மட்டுமே முடியும். ஆகவே பொருட்களை சரியான தெளிவான விவரங்களோடு பட்டியலிடுவதும் தகவல்களை இற்றைப்படுத்தலும் மிகவும் முக்கியமானதாகும் .

 • தொழில்முறையிலாக பொருட்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி நம்பகத்தன்மையை பேணுங்கள். 

வாடிக்கையாளர்கள் உங்களிடம் கொள்வனவு செய்யவேண்டும் எனில் நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவேண்டும் ஏனெனில் இணையவழி கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றப்படுவதும் சிலவேளைகளில் நடைபெறுகிறது.

ஆகவே உங்களின் உற்பத்திகளை விற்பனை செய்கிறீர்கள் எனின் அது பற்றிய விபரங்களையும் உண்மையான தொழில்முறையான படங்களையும் இணைக்கத் தவறவேண்டாம். அல்லது நீங்கள் வேறு உற்பத்தியாளர்களின் பொருட்களை (உதாரணமாக கைத்தொலைபேசி) விற்பனை செய்தால் அதன் உத்தியோகபூர்வ  விற்பனை தளத்தில் இருக்கும் ஒரு படத்தை இணையுங்கள்.

 • உங்கள் பொருட்களின் வியாபாரக் குறி (Brand) பற்றிய விபரங்களையும் உத்தரவாதக் காலத்தையும் குறிப்பிடுங்கள்.

நீங்கள் வழங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களை வாங்கச்செய்ய இதுவும் ஒரு வழிமுறை. தான் வாங்கப்போகும் பொருள் பற்றி தேடி அறிந்து வரும் வாடிக்கையாளரிடம், வியாபாரக் குறி (Brand), தனித்துவங்கள், உத்தரவாதக் காலம் என்பவற்றை பொருள் பற்றிய  விளக்கத்தில் காட்சிப்படுத்துவது அப்பொருள் விற்கப்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும்.

 • திருப்தியடைந்த வாடிக்கையாளர்களை நேர்முகமான பின்னூட்டங்களை வழங்க ஊக்குவியுங்கள்.

இலங்கையின் மக்கள் இப்போதும் இலத்திரனியல் சாதனங்களை இணையவழியில் கொள்வனவு செய்யத் தயங்குகிறார்கள் ஏனென்றால் பொதுவாக இலத்திரனியல் சாதனங்களின் விலை அதிகமாக இருப்பதாகும். பெரும்பாலான மக்கள் ஏனையோரின் கருத்துக்களிலும் அனுபவங்களையும் வைத்தே முடிவெடுக்கிறார்கள்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் அவர்களிடம் அடிக்கடி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள ஏற்கனவே உங்களிடம் பொருட்களை வாங்கியவர்களிடம் நல்ல பின்னூட்டங்களை விட்டுச்செல்லவும் உங்கள் வர்த்தக நிலையத்துக்கு 4+ மதிப்பீட்டை விட்டுச்செல்லவும் ஊக்குவிக்கவும்.

 • வாடிக்கையாளர்களோடு ஈடுபாட்டுடன் செயற்படுங்கள்!

இணையவழி வர்த்தக நிலையத்தை வைத்திருக்கும் நீங்கள் வாடிக்கையாளர்களின் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிவரும். அதில் பெரும்பான்மையானவை ஏற்கனவே கேட்கப்பட்டதாகவும் நீங்கள் பதிலளித்ததாகவும் இருக்கும். எனினும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவும் வாடிக்கையாளர்களை கூட்டவும் அவர்களோடு உரையாடுவதும் அவர்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களையும் விளக்கங்களையும் தொடர்ந்து வழங்கவேண்டும்.

இது வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில் பெரும்பங்கு ஆற்றுவதுடன் அவர்களுடன் ஈடுபாட்டுடன் செயற்படுவது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும்.  

 • பணம் செலுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளை வழங்குங்கள்.

வாடிக்கையாளர்கள் உங்கள் வணிகத்தை தெரிவு செய்வதில் பணம் செலுத்துவதற்கு வழங்கும் போது பணம் செலுத்தும் முறை, கடனட்டைகள் (Credit/Debit Payment) மூலம் பணம் செலுத்தல், தவணை முறைகளில் பணம் செலுத்தல் போன்ற  பல்வேறு வழிமுறைகள் காணப்படுதல் முக்கிய பங்காற்றுகிறது.

தவணை முறைகளில் பணம் செலுத்தும் வசதி மற்றும் கொள்வனவுகளின் போது தள்ளுபடிகளை வழங்குதல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும். முடிந்தால் பல்வேறு தள்ளுபடிகளையும் வெவ்வோறு வாடிக்கையாளர் நலன்சார்ந்த வசதிகளையும் வழங்குங்கள்.

 • உங்கள் பொருட்களை விளம்பரதாரர்கள் மூலம் விளம்பரப்படுத்துங்கள்!

உங்களது வணிகம் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட வளங்களைக் கொண்ட ஆனால் புதிய இணையவழி வர்த்தகமாக இருந்தால் மேலும் புதிய வாடிக்கையாளர்களையும் பாவனையாளர்களையும் கவர விளம்பரப்படுத்தல் ஒரு மிகச்சிறந்த வழி. 

நீங்கள் விளம்பரத்தார்கள் மூலம் விளம்பரப்படுத்தலாம் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உங்கள் விற்பனைப் பொருள் பற்றிய விளம்பரம் ஒன்றை காட்சிப்படுத்தலாம். இது உங்கள் பொருட்களுக்கு பரந்த அறிமுகத்தை தருவதுடன் இணையவழி வாடிக்கையாளர்கள் பொருட்களை தேடும் பொது உங்கள் விற்பனைப்பொருள் அவர்களை சென்றடையலாம். 

Daraz விற்பனையாளர் நிகழ்ச்சியில் (Daraz Seller stimulus Programme) பதிவுசெய்து உங்களின் இணையவழி இலத்திரனியல் வர்த்தகத்தை விரிவுபடுத்துங்கள்!

தெற்காசியாவின் மிகப்பெரும் இணையவழி சந்தைப்படுத்தலை மிகவும் இலகுவான வழியில் Daraz வழங்குகிறது. இலகுவானதும் உடனடியானதுமான இணையவழி விற்பனை வசதிகளை Daraz உங்களுக்கு தருகிறது. இல் 20+ மில்லியன் பொருட்களை 100க்கும் அதிகமான பிரிவுகளில் இலங்கையின் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய வசதியைப் பெறலாம்.

Daraz இல் விற்பனை செய்வது எப்படி ?

Daraz மூலம் இலத்திரனியல், பொருட்களை விற்பது நீங்கள் நினைப்பதைவிட இலகுவானது!

அல்லது Daraz இனது வலைத்தளத்தில் விற்பனையாளர் பதிவுப் பக்கத்திற்கு சென்று அங்கு கூறப்படும் படிமுறைகளை பின்பற்றி உங்களின் இலத்திரனியல் விற்பனை நிலையத்தை ஆரம்பியுங்கள் !

Daraz இல் விற்பனையாளராவதால் கிடைக்கும் அனுகூலங்கள்:

உங்கள் வணிகத்தை தன்னம்பிக்கையுடன் முன்னேற்ற நினைக்கிறீர்கள் எனின் Daraz உங்களுக்கான சிறந்த தீர்வு.  Daraz உங்களின் விற்பனை அனுபவத்தை எப்போதும் சிறந்ததாக அமைக்க முழுமையான வெளிப்படைத் தன்மையையும் பல்வேறு வசதிகளையும்  வழங்குகிறது.

நீங்கள் இப்போதுதான் உங்களின் இணையவழி விற்பனையை ஆரம்பித்திருக்கிறீர்கள் எனின், Daraz இன் விற்பனையாளர் நிலைய வசதிகளின் மூலம் தகுந்த வளவாளர்களால் உங்களின் வணிகத்தை மேம்படுத்த இலவசமாக பயிற்சியளிக்கப்படும்.

Daraz இல் உங்கள் விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதால் பல அனுகூலங்கள் உங்களுக்கு கிடைக்கும். Daraz இனால் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் சில வசதிகள் பின்வருமாறு:

  null
 • இலங்கை பூராகவுமுள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெறலாம்.
 • Daraz இல் புதிய விற்பனையாளர் மிக விரைவாக பதிவு செய்யலாம். இரண்டே நாட்களில் உங்கள் விற்பனைகளை நீங்கள் ஆகலாம்.!
 • விற்பனையாளர்கள் இலவசமான பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வர்த்தகத்தை மேம்படுத்தலாம்.
 • பட்டியலிடுவதற்கு கட்டணம் அறவிடப்படுவதில்லை. உங்கள் பொருட்கள் விற்பனையாகும் போதே பணம் செலுத்தவேண்டும்.
 • வேகமாகவும் நம்பகத் தன்மையோடும் உங்கள் பொருட்களை வாடிக்கையாளரிடம் கொண்டுசேர்க்கலாம்..
 • சரியான நேரத்தில் பாதுகாப்பாக உங்களுக்கு பணம் செலுத்தப்படும்.
 • 24 மணிநேரமும் தொழில்முறை சேவைகளை நீங்கள் பெறலாம்.

Daraz இல் விற்பனையாளராகி வெற்றிகரமாக இணையவழி வியாபாரத்தில் ஈடுபடுவது பற்றி நீங்கள் மேலும் அறியவிரும்பினால் கீழே உள்ள  டராஸ் இல் விற்பனையாளராவது பற்றிய கையேட்டைப் பாருங்கள்!

எனவே, Daraz விற்பனையாளர் திட்டத்தின் மூலம் பதிவுசெய்து இப்போது உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துங்கள்!

daraz seller care center
Click on the image to download!

Amaani Inthikab

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

css.php